2025 மே 23, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் தந்தை பலி; தாயும் குழந்தையும் காயம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர,ஜுட் சமந்த)

புத்தளம், வண்ணாத்திவில்லுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை பலியான அதேவேளை,  தாயும் 2 மாதக் குழந்தையும் காயமடைந்துள்ள நிலையில்  புத்தளம் தள வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மன்னாரிலிருந்து சிலாபத்துறையூடாக கற்பிட்டி சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

காயமடைந்த 2 மாதக் குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்துக்குள்ளான பஸ் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவ்விடத்தில் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X