2025 மே 23, வெள்ளிக்கிழமை

கரைத்தீவு முஸ்லிம் வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஹிரான் பிரியங்கர, எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் மற்றும் சில ஆசிரியர்களை பாடசாலையைவிட்டு இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து கரைத்தீவு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அதிபர் தரத்திலான அதிபர் ஒருவரை நியமிக்குமாறும், மிக நீண்டகாலமாக அங்கு கடமையாற்றும் சில ஆசிரியர்களை இடமாற்றம் செய்யுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன் போது கோசங்களை எழுப்பியதோடு பல்வேறு சுலோகங்களையும் தாங்கி நின்றனர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் வண்ணாத்திவில்லு பிரதேச சபை அலுவலகத்திற்குச் சென்று பிரதேச சபைத்தலைவரிடம் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். பிரதேச சபைத் தலைவர் வடமேல் மாகாண முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு அடுத்த வாரம் நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருவதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளித்தார். இதன்பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X