2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிங்கி இறால்களை வைத்திருந்த மூவர் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 04 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஹிரான் பிரியங்கர)


சிணை முட்டையிடும் காலப்பகுதியில் பிடிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ள சிங்கி இறால்களைப் பிடித்து தம் வசம் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் மூவரை கடற்படையினர் கைது செய்து புத்தளம் உதவி கடற்றொழில் அத்தியட்சகர் அலுவலக அதிகாரிகளிடம் இன்று வியாழக்கிழமை ஒப்படைத்துள்ளனர்.

கல்பிட்டி இலந்தையடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 39 சிங்கி இறால்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்கள் சிங்கி இறால்கள் சிணை முட்டையிடும் காலப்பகுதி ஆகையால் இக்காலப் பகுதிகளில் இந்த வகை இறால்களைப் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தடையினை மீறி இந்த இறால்களைப் பிடித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த இறால்களை ஆழ்கடலில் சென்றே தாம் பிடித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட சிங்கி இறால்களும் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட போது சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்,  உயிருடன் உள்ள சிங்கி இறால்களை நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X