2025 மே 23, வெள்ளிக்கிழமை

வட மேல் மாகாண பதில் முதலமைச்சராக சனத் நிஷாந்த பெரேரா நியமனம்

Super User   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}



(அப்துல்லாஹ், எஸ்.எம்.மும்தாஜ்)


வட மேல் மாகாண பதில் முதலமைச்சராக மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கடற் தொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையினாலேயே மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா பதில் முதலமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
 
வட மேல் மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வின் போது  மாகாண ஆளுனர் திஸ்ஸ ஆர். பலல்ல முன்னிலையில், சனத் நிஷாந்த பெரேரா பதில் முதலமைச்சராக சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த நிகழ்வில், வட மேல் மாகாண முதலமைச்சின் செயலாளர்  ஜயந்த வீரரத்ன மற்றும் வட மேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் நிர்மாணம்இ கடற் தொழில் அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X