2025 மே 23, வெள்ளிக்கிழமை

தீ வைக்கப்பட்ட தக்கியாவை புனரமைக்க வட மத்திய மாகாண முதலமைச்சர் நிதியுதவி

Super User   / 2012 ஒக்டோபர் 31 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(றிப்தி அலி)


தீ வைத்து எரிக்கப்பட்ட அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் மத்ராஸாவுடன் கூடிய தக்கியாவை புனரமைப்பு செய்வதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிதி வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சிதினால் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதி அனுராதபுரம் முஹைதீன் பெரிய பள்ளிவாசலிடம் வட மத்திய மாகாண முதலமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் மத்ராஸாவுடன் கூடிய தக்கியா புனரமைப்பிற்கு இந்நிதி போதாது என அனுராதபுரம் முஹைதீன் பெரிய பள்ளிவாசல் தலைவர் பௌஸ் ஹாஜியார் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த தக்கியாவின் புனரமைப்பை நாம் மேற்கொள்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனுராதபுரம் முஹைதீன் பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழுள்ள அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் மத்ராஸாவுடன் கூடிய தக்கியா கடந்த சனிக்கிழமை இனந்தெரியாத குழுவினாரால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த தக்கியாவை அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை உள்ளிட்ட பல அமைப்புகள் பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு எதிராக கண்ட அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை, இந்த தக்கியா தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனிற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X