2025 மே 23, வெள்ளிக்கிழமை

சிகிரியா காட்டுக்குள் காசியப்ப மன்னனின் கீரிடத்தைத் தேடிச் சென்ற நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 02 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணிக்கக் கற்கள் பொருத்தப்பட்ட காசியப்ப மன்னனின் கிரீடத்தைத் தேடி சிகிரியா காட்டுப்பகுயில் தேடுதல் நடத்திய நால்வரை வனஜீவி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிமருந்து உட்பட ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக சிகிரியா காட்டுக்குப் பொறுப்பதிகாரியான பிரதீப் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

சிகிரியா குன்றுக்கு சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மாளிகாகந்தை எனும் காட்டுப் பகுதியிலேயே மேற்படி சந்தேகநபர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், புதையல் தோண்டுபவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மின்னேரியா மற்றும் சிகிரியா வனஜீவி அதிகாரிகள், அவர்களைக் கைது செய்துள்ளனர்.

மாணிக்கக் கற்கள் பொருத்தப்பட்டுள்ள காசியப்ப மன்னனின் கிரீடத்தை தேடியே தாங்கள் இந்த காட்டுப் பகுதிக்கு வந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X