2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கிரீடம் தேடியோர் அரசியல்வாதியின் சகாக்கள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 02 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசியப்ப மன்னனின் கிரீடத்தைத் தேடி சிகிரியா காட்டில் தேடுதல் நடத்தியவர்கள் அரசியல்வாதியின் சகாக்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதியொருவரின் சகாக்கள் என பொலிஸார் மற்றும் வனஜீவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மன்னனின் கிரீடத்தை தேடும் நடவடிக்கையில் மேற்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிக்கும் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தம்புளை அரசியல்வாதியொருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் கேகாலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக குறிப்பிட்ட பொலிஸார் மற்றும் வனஜீவி அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X