2025 மே 23, வெள்ளிக்கிழமை

விற்றமின் 'ஏ' கூட்டுக்குளிசைப் பாவனை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 07 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் வைத்திய முகாமொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் ஏ கூட்டுக் குளிசைகளை உட்கொண்ட பின் உபாதைகளுக்கு உள்ளான 27 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேற்படி குளிசைப் பாவனையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுகாதார சேவை திணைக்கள அதிகாரிகளால் நடத்தப்பட்ட மேற்படி வைத்திய முகாமின் போது வழங்கப்பட்ட விற்றமின் ஏ கூட்டுக் குளிசைகளை உட்கொண்ட மாணவர்களில் 27பேர் திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த குளிசைகளை வழங்குவடை இடைநிறுத்திய மாவட்ட சுகாதார திணைக்களம், அவற்றில் ஒருபகுதியை இரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது. இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X