2025 மே 23, வெள்ளிக்கிழமை

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விதை நெல் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (எம்.சீ.சபூர்தீன்)
வறட்சியினால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்ட மக்கள் மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்காக அரசாங்கத்தினால் 32 கோடி பெறுமதியான மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் புசல் விதை நெல்லினை பங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 'குருநாகல் மாவட்டத்திற்கு 115,000 புசல் விதை நெல்லும் அநுராதபுரம் மாவட்டத்திற்கு 107,000 புசல் விதை நெல்லும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு 84,000 புசல் விதை நெல்லும் புத்தளம் மாவட்டத்திற்கு 34,000 புசல் விதை நெல்லும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது' என கமநல சேவைகள் மற்றும் வனவிலங்குகள் பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

"வறட்சியினால் பாதிக்கப்ட்ட மக்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி இதற்கான நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அறுவடை காலத்தின்போது கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான டிரக்டர் இயந்திரங்களை இலவசமாக பயன்படுத்தவுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X