2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விகாராதிபதிபதியின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு

Super User   / 2012 நவம்பர் 27 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

வென்னப்புவ, சிரிகம்பல - கிரிமெட்டியானவத்தை ஸ்ரீ லங்காதிலக பௌத்த விகாரையின் விகாராதிபதி திஸ்ஸமகாராமயே சங்சானந்த தேரர் நேற்று திங்கட்கிழமை இரவு ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த விகாரையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த பூஜை வழிபாடு ஒன்றிற்காக நேற்று பிரதேச இளைஞர்கள் சிலர்  பௌத்த விகாரையினைச் சூழவுள்ள பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, ஆயுதங்களுடன் வந்துள்ள சிலர் இந்த இளைஞர்களை தாக்கிவிட்டு  சென்றுள்ளனர்.  இவ்வாறு தாக்குதல் நடாத்தியவர்களைக் கைது செய்யுமாறு கோரியே குறித்த விகாரையின் விகாராதிபதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் வால்கள் போன்ற கூரிய ஆயுதங்களைப் பாவித்துள்ளதாகவும் வென்னப்புவ பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளானவர்கள் மாராவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக வீரக்கொடி உண்ணாவிரதம் இருந்த விகாராதிபதியுடன் பேச்சவார்த்தை நடாத்தி அடுத்த இரு தினங்களுக்குள்  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை  கைது செய்வதாக வாக்குறுதியளித்தததையடுத்து விகாரதிபதியின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .