2025 மே 22, வியாழக்கிழமை

சிறுநீரக நோயாளர்களுக்கு விசேட வேலைத்திட்டம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். சீ. சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்திலுள்ள சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோயளர்கள் சிகிச்சை பெறுவதற்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு ஒவ்வொரு மாதத்திலும் பல தடவைகள்செல்ல வேண்டியுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து போதனா வைத்தியசாலைக்கு செல்லும் வரையான போக்குவரத்தினை இலவசமாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே அடுத்த வருடத்திலிருந்து விசேட போக்குவரத்து அட்டையொன்றினை சிறுநீரக நோயாளர்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக வடமத்திய மாகாண சிறுநீரக நோய்த் தடுப்புப் பிரிவின் பிரதான வைத்தியர் அஸங்க ரணசிங்க தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X