2025 மே 23, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு விசேட சுகாதார வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களை டெங்கு நோய் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் விசேட சுகாதார வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோனின் ஆலோசனைப்படி சுகாதாரப் பிரிவினால் டெங்கு நோய் ஒழிப்பு புகை விசுறுதல், மருந்து தெளிக்கப்பட்ட நுழம்பு வலைகள் விநியோகித்தல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசேடமாக சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களைப் பாதுகாப்பதற்காக சுகாதாரப் பிரிவினால் வேலைத் திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல நலன்புரி நிலையங்களிலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X