2025 மே 22, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை

Super User   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்தில் அடிக்கடி வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளப் பெருக்குகளுக்குள் சிக்கும் குடும்பங்களுக்கு கட்டுக்கெலியாவ பகுதியில் காணிகளை வழங்கவுள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்தார்.

மல்வத்து ஓயாவை அண்டி அநுராதபுரம் நகரம் மற்றும் லேன் பகுதிகளில் சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் அடிக்கடி வெள்ளப்பெருக்குகளிளால் பாதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படுவோருக்கு வெலிகந்த பகுதியில் காணிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லங்காபுர சங்கபோதிகம மற்றும் கல்கெட்டிகம பகுதிகளில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கே வெலிகந்த பகுதியில் காணிகள் வழங்கப்படவுள்ளன.

வட மத்திய மாகாணத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு போதியளவு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட  அரலகங்வில, சுவசெதகம, சங்கபோதிகம, கல்கெட்டிகமன ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன மற்றும் வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் உலர் உணவுப் பொருட்களை வழங்கினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X