2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. என்.முனாஷா

நீர்கொழும்பு, குரணை பிரதேசத்திலிருந்து கடந்த 17 ஆம் திகதி காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குரணை சாந்த யூட் வித்தியாலயத்திற்கு பின்னாலுள்ள களப்பிலிருந்து சடலம் அழுகிய நிலையில் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

ரொயேல் பெர்னாந்து (45 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சடலத்தை இறந்தவரின் மனைவியும் தாயாரும் அடையாளம் காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X