2025 மே 15, வியாழக்கிழமை

சொகுசு வாகனத்தில் கசிப்பு கொண்டுசென்ற நால்வர் கைது

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சொகுசு வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு கொண்டுசென்ற நால்வரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

பிங்கிரியவிலிருந்து கொழும்புக்கு இவற்றை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போதே மேற்படி நால்வரும் சிலாபம் விலத்தாவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் சென்ற சொகுசு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதிலிருந்து பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்ட 650 கசிப்பு போத்தல்கள் வாகனத்தின் பின் ஆசனத்தின் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வென்னப்புவ, தங்கொட்டுவ மற்றும் முந்தல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நால்வரையும் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .