2025 மே 14, புதன்கிழமை

வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உயிரழப்பு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 28 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
 
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவை நிர்மலபுர எனும் பிரதேசத்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த பெண் ஒரவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தனிமையில் இருந்த 58 வயது மூதாட்டி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
 
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை அங்கு சென்றுள்ள உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகள், வீடு எரிந்துள்ள விடயத்தை அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
 
புத்தளம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .