2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புகையிரத மிதிபலகையில் பயணித்தவர் பாலத்தில் மோதி பலி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

கொழும்பு கோட்டையிலிருந்து ஓமந்தை வரை பயணிக்கும் ரஜரட்ட ரெஜின கடுகதி புகையிரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி (29 இரவு) உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் புகையிரத பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வடபகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புகையிரதத்தின் மிதி பலகையில் பயணித்த குறித்த இளைஞன் அநுராதபுரம் புதிய நகர புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கறுப்பு பாலத்தில  மோதி படுகாயமடைந்துள்ளதோடு சிகிச்சைக்காக அநுராதபுரம் போதானா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக  அநுராதபுரம் புகையிரத பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .