2025 மே 14, புதன்கிழமை

ஐ.தே.க. முன்மொழிந்தவர் தவிசாளராக தெரிவு

Super User   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியினால் முன்மொழியப்பட்டவர் வட மேல் மாகாண சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வட மேல் மாகாண சபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களின் பெயர்களை முன்மொழிந்தனர்.

இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சியினால் முன்மொழியப்பட்ட தர்மசிறி தசநாயக்க 30 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்ட இந்திரானி தசநாயக்க 22 வாக்குகளையும் பெற்றனர்.

மேலதிக எட்டு வாக்குகளினால் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்மொழியப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் தர்மசிறி தசநாயக்க வட மேல் மாகாண சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .