2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதிய கட்டிடத்திற்கான திறப்பு விழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ் 

புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட நாயக்கர்சேனை அரசினர் தழிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கான திறப்பு விழா அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது.

பாடசாலையின் அதிபர் லில்லி ஜயசீலன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர, மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம். தாஹிர், சிந்தக மாயாதுக்க, எச்.எம். நியாஸ், புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் கே.எம்.ஜி. டபிள்யு. பண்டார உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் போது குறைந்த விடுமுறை பெற்ற ஆசிரியருக்கான பரிசு வழங்கப்பட்டதுடன், சாதனை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை, முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இதன்போது நடைபெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .