2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இலவச சீருடை வழங்கும் நிகழ்வு

George   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பாதணிகள் வழங்கும் வைபவம் இன்று காலை 10.30 மணிக்கு அதிபர் ஜீ.வை.பிரிட்டோ தலைமையில் நடை பெற்றது
.
அதிதிகள் அதிபரினால் அழைத்து வரப்பட்டதை குத்து விளக்கேற்றப்பட்டு மாணவர்களின் சமய நிகழ்வுடன் விழா ஆரம்பமானது.

இவ்விழாவில் சகல மாணவர்களுக்கும் இலவச சீருடைகளும் மற்றும் பாதணிகளும் அதிதிகளால் வழங்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கஷ்ட அதி கஷ்ட மற்றும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாதணிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X