2025 மே 09, வெள்ளிக்கிழமை

தங்கச் சங்கிலி அபகரிப்பு: இளைஞன் கைது

Kogilavani   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பெண்ணை தாக்கிவிட்டு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்ற இளைஞர் ஒருவரை கைதுசெய்துள்தாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாம்புரி பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை(23) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாம்புரி கொலணி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாம்புரி வெல்ல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.இரேசா மதுவந்தி எனும் பெண், கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்படி நபரை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X