2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளம் சாகிரா தேசிய பாடசாலை வீரர்களுக்கு வரவேற்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


கல்வி அமைச்சு மற்றும் பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து அகில இலங்கை பாடசாலைகளின் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக நடாத்திய கால்பந்தாட்ட தொடரில், அகில இலங்கை ரீதியாக 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட புத்தளம் சாகிரா தேசிய பாடசாலை அணியினரை வரவேற்று, வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (29) மாலை புத்தளம் நகரில் இடம்பெற்றது.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் வந்திறங்கிய வீரர்களை, புத்தளம் நகர முதல்வரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ், புத்தளம் நகர மக்கள் சார்பாக வரவேற்பதாக தெரிவித்து கைலாகு கொடுத்து வரவேற்றார்.

புத்தளம் கொழும்பு முகத்திடலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் குருநாகல் வீதி, போல்ஸ் வீதி, மரிக்கார் வீதி, கே.கே. வீதி, மன்னார் வீதி ஊடாக சாஹிரா கல்லூரியை சென்றடைந்தது. வழி நெடுகிலும் திரண்டிருந்த பொது மக்கள் வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து மலர் மாலைகளையும் அணிவித்தனர்.

கல்லூரி மைதானத்தில் இறுதியாக நடைபெற்ற நிகழ்வில், புத்தளம் நகர பிதா பாயிஸ் வெற்றி வீரர்கள் அனைவருக்கும் பதக்கம் அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கி தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைத்தார். இது தவிர இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட ஜேர்சி தொகுதி மற்றும் கோல் கம்பத்தையும் அதன் பொருளாளர் ஜௌசி, அதிபரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில், அதிபர் எஸ்.ஏ.சி.யாக்கூப், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன பொருளாளரும் புத்தளம் கால்பந்தாட்ட சங்க செயலாளருமான ஜே.எம்.ஜௌசி, புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முசம்மில், புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவுக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் இசட்.ஏ.சன்ஹீர் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் குழுவினர்கள், விளையாட்டு பொறுப்பாசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X