2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்தில் பாடகர் பலி

Gavitha   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலத்த வீதியில் புளியங்கார எனும் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் பிரபல இசைக்குழுவொன்றில் பாடகரொருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹவௌ பிரதேசத்தைச் சேர்ந்த ராஜித ரொட்னி (வயது 37) எனும் பாடகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடகர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்சாரக் கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த பாடகர், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பெரகன் இசைக்குழுவில் தனது பாடகராக தொழிலை ஆரம்பித்த அவர், பதினொரு வருட காலமாக இத்தாலி நாட்டிலுள்ள இசைக்குழு ஒன்றில் இணைந்து பாடி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X