Gavitha / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
2001ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடம் உடைந்து விழும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்து, நீர்கொழும்பு வைத்தியசாலை அறக்கட்டளை மற்றும் நீர்கொழும்பு நகர முக்கியஸ்த்தர்கள் சிலர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (17) முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.
பாரிய அசம்பாவிதம் ஒன்று ஏற்படுவதற்கு முன்பாக நீதிமன்ற உதவியை நாடுவதற்காகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்திலக்கவிடம் இது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்ட பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டது.
நீர்கொழும்பு வைத்தியசாலை அறக்கட்டளையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் இயன், அங்குரகாரமுல்ல விகாரையின் விகாராதிபதி கொந்தகே முல்ல ஞானசிறி தேரர், அருட் தந்தை ரொசைரோ, நீர்கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் பேர்னாட், சட்டத்தரணிகளான கொட்பிறி குரே, டியூடர் புளத்வெல, வினசன்ட் புளத்சிங்கள, நீர்கொழும்பு முன்னாள் நகராதிபதி ஹேர்மன் குரெரா உட்பட மேலும் பலர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து முறைப்பாட்டை செய்தவர்கள் தரப்பிலிருந்த மதத் தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
'நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் அபாயகரமான நிலை தொடர்பாக மேல் மாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. கட்டடம் உடைந்து வீழ்ந்தால் 5,000 நோயாளர்கள் வரையில் பலியாவர். எனவே இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் உடனடியாக தனக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் என்றனர்.
கட்டடத்தின் பல இடங்களிலும் உள்ள நீர் கசிவு, மழைக் காலங்களில்; லிப்ட் வழியாக நீர் ஓடுதல், நோயாளிகள் தங்கியுள்ள அறைகளில் நீர் கசிவு, கொங்ரீட் பழுதடைந்திருத்தல், மின்சார கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் போன்றன 2001ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட ஏழு மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத்தில் பல வருடங்களாக தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago