Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பொலன்னறுவை, மன்னம்பிட்டி மஹாவலி கங்கைக்கு அருகில் உள்ள முருகன் கோவிலில் அரச அனுசரணையில் கும்பாபிஷேக உற்சவத்தை ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரீ.பி.பவாசீலி ஜயலத் பணிப்புரை விடுத்துள்ளார்.
திம்புலாகல பிரதேச செயலாளருக்கே அரசாங்க அதிபரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ் மக்களின் ஆன்மிக ஒன்றுகூடல் தலமாக விளங்கும் இந்தக் கோவிலில் சமய நல்லிணக்கத்தையும் சமூக சகவாழ்வையும் வளர்க்கும் நோக்குடன் கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோவில் யாத்திரை மடத்தின் நம்பிக்கைச்சபை பொறுப்பாளரும் பொருளாளரும் ஸ்ரீரமண மகரிஷி அறப்பணிமன்ற இலங்கைக் கிளைத் தலைவருமான எம்.செல்லத்துரை அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதற்கு அமைவாகவே இந்தப் பணிப்புரை அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 3ஆம் திகதி நிகழும் வெசாக் உற்சவத்துடன் இணைந்ததாக இந்த கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
கடந்த முப்பது வருட போருக்கு பின்னர் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து இந்த கங்கைக் கோயிலில் இன ஐக்கிய கும்பாபிஷேகத்தை நடத்தவுள்ளதாகவும் எதிர்காலத்தில் திம்புலாகல பிரதேசத்தில் வாழும் தமிழ், சிங்கள மக்களின் இன ஐக்கியத்துக்கு ஊடாக சமய நல்லிணக்கத்தையும் சமூக சகவாழ்வையும் வளர்க்க விரும்புவதாகவும் கோவில் யாத்திரை மடத்தின் நம்பிக்கைச்சபை பொறுப்பாளரும் பொருளாளரும் ஸ்ரீரமண மகரிஷி அறப்பணி மன்ற இலங்கைக் கிளைத் தலைவருமான எம்.செல்லத்துரை தெரிவித்தார்.
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago