2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

3 வயது குழந்தையை கடத்திய இருவருக்கு அபராதம், ஒத்திவைக்கப்பட்ட சிறை

Super User   / 2012 மே 24 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எவ். ஜெஸீரா)

முந்தல் பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மூன்றரை வயதுக் குழந்தையை கடத்தி கப்பம் கோரிய இருவருக்கு 10 வருட காலத்திற்கு  ஒத்தி வைக்கப்பட்ட இரு வருட சிறைத் தண்டணையும், தலா 50 ஆயிரம் ரூபா அபராதமும் இன்று விதிக்கப்பட்டுள்ளது
தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.டி.எம்.தாஸிம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி பாலர் பாடசாலைக்குச் சென்ற மூன்றரை வயதுச் சிறுமியை தாய் அழைத்து வரச் சொன்னதாகக் கூறி பாலர் பாடசாலையிலிருந்து குறித்த சிறுமியை அவளது ஒன்றுவிட்ட சகோதரர் கூட்டிச் சென்றுள்ளார்.

மேற்படி சகோதரரான 21 நபரும்  45 வயதான பெண்னொருவரும்  குறித்த சிறுமியை விடுவிக்க வேண்டும் எனில், 50 இலட்சம் ரூபாவை கப்பமாகத் தரவேண்டும் என சிறுமியின் தாயிடம் தொலைபேசி மூலம் கேட்டனர்.

அவ்வளவு பணம் தன்னிடம் தற்போதைக்கு இல்லை என்பதை சிறுமியின் தாய் கூற, 15 இலட்சத்தை கொடுக்குமாறு கடத்தல்காரர்கள் கேட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த பெப்ரவரி 25ஆம் திகதி முந்தல், ஆராச்சிக்கட்டுவ ஆகிய பகுதிகளில் 200இற்கும் அதிகமான பொலிஸ் குழுக்கள் சீருடையிலும், சிவிலிலும் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பிரதான சந்தேக நபரும், பெண்ணும் சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து, ஆரச்சிக்கட்டுவ பகுதிக்கு தனியே  வந்த சிறுமியின் தாயிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டனர். எனினும் அப்பகுதியில் பொலிஸ் நடமாட்டம் இருப்பதை அவதானித்ததும் சிறுமியை தாயிடம் ஒப்படைக்காமல் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை பின்தொடர்ந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை வழிமறித்ததுடன், சிறுமியையும், 10 இலட்சம் ரூபா பணத்தையும் மீட்டதுடன்  குறித்த சந்தேக  கைது செய்து நிதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பான வழக்கில் இருவரும் குற்றவாளிகளாக இணங்காணப்பட்டதுடன், அவர்களுக்குரிய தண்டணை இன்று வழங்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X