2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிக பணிநீக்கம்

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் 12ஆம் திகதி 13 வயது சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணையை அலட்சியப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ்  மா அதிபர் என்.கே.இலங்கக்கோனினால் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் சிறிய முறைப்பாட்டுக் கிளையைச் சேர்ந்த அதிகாரிகள்,  உப பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆகியோரே தற்காலிமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் தலைமையக முன்னாள் பொறுப்பதிகாரி கூறினார்.

இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெறுமென  பொலிஸார் கூறினர். (அதுல பண்டார)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X