2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

67 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகு இடைமறிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 19 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவவிலிருந்து 8 கடல் மைல்களுக்கு அப்பால் 67 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற மற்றுமொரு படகு நேற்று புதன்கிழமை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளது.

13 சிங்களவர்களும் 54 தமிழர்களுமாக மொத்தம் 67 பேர் இப்படகில் இருந்தனர். தாங்கள் கொழும்பு, நீர்கொழும்பு, வென்னப்புவ, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என இப்படகிலிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முகத்துவாரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இப்படகும் அதிலிருந்தவர்களும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (சுபுன் டயஸ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X