Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 மார்ச் 04 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
பிரசித்தி பெற்ற உள்நாட்டு நிறுவனமொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான பழுதடைந்த சொசேஜஸ் பைக்கற்றுக்களை நேற்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பிரதேச சுகாதார பணிமனையின் உணவு மற்றும் ஒளடதங்கள் பரிசோதகர் ஆனந்த வேரகொட தெரிவித்தார்.
பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றுக்கமைய, அநுராதபுரத்திலுள்ள குறித்த நிறுவனத்தின் களஞ்சியசாலையின் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 4000 பைக்கற் சொசேஜஸ்களே உண்பதற்கு பயன்படுத்த முடியாதவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான்னவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து சொசேஜஸ்களை பரிசோதித்து பார்த்த நீதவான் இவற்றை உணவு மற்றும் ஒளடதங்கள் பரிசோதகர் ஆனந்த வேரகொடவின் மேற்பார்வையின் கீழ் அழித்துவிடுமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
46 minute ago
53 minute ago
3 hours ago