2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கொழும்பில் GTN DIPLOMA IN JOURNALISM

A.P.Mathan   / 2016 மார்ச் 04 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஊடக நெறிமுறைகளையும் தரத்தினையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் ஊடகத்துறையை புதிய விழுமியங்களுடன் உயர்த்தும் ஊடகப் பயிற்சிநெறி நாளை (03) சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. விண்ணப்பங்களை இதுவரை அனுப்பாதவர்கள் நேரில் வந்து சமர்ப்பித்து பயிற்சி நெறியை தொடரலாம்.
 
ஊடகத் துறையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் உள்ளவர்களுக்கான மிகவும் காத்திரமான பயிற்சி.
 
தனியாக ஒரு துறையில் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படும் சூழலை மாற்றும் புதிய முயற்சி.
 
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம், சமூக வலைத்தளங்கள் நிறைந்த உலகில் ஊடகவியலாளராக முயலும் ஒருவருக்கான முழுமையான பயிற்சி முறை.
 
ஊடகத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற சர்வதேச, உள்நாட்டு, துறைசார் வல்லுனர்கள் வழங்கும் பயிற்சி நெறிதான் GTN DIPLOMA IN JOURNALISM.

1)   அச்சு ஊடகத்துறை
2)   வானொலித் துறை (ஒலிஊடகம்)
3)   தொலைக்காட்சி (ஒளி  ஊடகம்)
4)   இணைய மற்றும் புளொக் ஊடகம்
5)   சமூக வலைத்தள செய்திப் பரிமாற்றம்
6)   புகைப்பட ஊடக முறை
உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
 
களப்பயிற்சி, செயன்முறைப் பயிற்சி, ஊடகக் கருவிகளை (வானொலி, ஒலி, ஒளி, புகைப்படக் கருவிகளை கையாளும் முறை) பயிற்சி பெற்ற முதுநிலை அறிவிப்பாளர்களுடன் இணைந்து வானலைகளில் நிகழ்ச்சிகள் செய்யும் நேரடிப் பயிற்சிகள் வழங்கப்படும். GTBC.FM இணைய வானொலியின் 24 மணிநேர நிகழ்ச்சிகளின் போது நேரலை நிகழ்ச்சிகளில் பயிற்சி வழங்கப்படும்.
 
மாற்று மொழி விரிவுரையாளர்களின் விரிவுரைகளின் போது மொழிபெயர்ப்பு உதவி வழங்கப்படும்.
 
பயிற்சி நெறியை நிறைவு செய்பவர்களில் சிறந்த முதல் 15 பேருக்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையம், ஜி.ரி.பிசி வானொலி, ஜி.ரி.என் இணைய தொலைக்காட்சி என்பவற்றிலும், பிராந்திய செய்தித் துறையிலும் முழு நேர உடனடிவேலை வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த நிலையில் பெறுபேறுகளை அடையும் 10 பேருக்கு பகுதி நேர வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும்.
 
வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் போது பயிலுனர்களின் திறன் மட்டுமே கணிப்பிடப்படும். சிபாரிசுகளோ ஏனைய விடயங்களோ கருத்தில் எடுக்கப்பட  மாட்டாது.
 
காலம் 6 மாதம்.
 
பயிற்சிக்கான கட்டணம் - 75,000 ரூபாய்
 
கட்டணத்தை மூன்று தடவைகள் செலுத்த முடியும். பயிற்சியில் இணையும் போது 35,000 ரூபா செலுத்தப்பட வேண்டும். மிகுதித் தொகையை இரண்டு தடவைகளாக செலுத்தலாம்.
 
விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள், குளோபல் தமிழ்ச் செய்திகள் நிறுவன வங்கிக்கணக்கில், கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டை நிர்வாகத்திடம் காண்பிக்க வேண்டும். பணம் செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட பின் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
 
ஊடக விரிவுரைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமாக இடம்பெறும்.
 
பயிற்சியின் நிறைவில் அங்கிகாரம் உடைய சான்றிதழ் வழங்கப்படும்.
 
கிழமை நாட்களில் களப் பயிற்சிகள் வழங்கப்படும். தாம் வாழும் பிராந்தியங்களிலும் களப் பயிற்சிகளில் ஊடக பயிலுனர்கள் ஈடுபடுதல் வேண்டும்.
 
யுத்தம் காவுகொண்ட ஊடகவியலாளர்களின் நேரடி வாரிசுகள் பயிற்சிநெறியில் கலந்து கொள்வதாயின் நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
 
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை, அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  முகவரி radiokuru@yahoo.com
 
தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி.
 
Global Tamil News PVT (LTD) (GTN)
NO 18/2/1
Ramakirshna Road
Wellawatta
Colombo 6

தபால் உறையில் அல்லது மின் அஞ்சல் விடயப் பகுதியில் GTN Media Training 2016 எனக் குறிப்பிட வேண்டும்.
 
தொலைபேசி இலக்கங்கள் – 0112 055595, 0112055755


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .