2021 மே 14, வெள்ளிக்கிழமை

ஜாம்பவானாகியது லைக்கா மொபைல் வலையமைப்பு

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 76 பில்லியன் பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம், ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது. 

2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை நிலை நிறுத்திய லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) மிகக் குறைந்த கட்டணத்தில் தனது உயர்தரமான சேவையை விரிவுபடுத்தியது. 

இதன்மூலம் 1.5 மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட பிரமாண்டமான MVNO சேவையைக் கொண்ட நிறுவனமாக லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) உருவெடுத்தது.

இதுவே ஸ்பெயினின் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம் லைக்கா நிறுவனத்தின் ஸ்பெயின் வலையமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அமைந்தது. இதன்மூலம் தொலைத்தொடர்பு சேவைச் சந்தையில் லைக்காமொபைல் (lycamobile) சாதனை படைத்துள்ளது.

இந்தப் பரிவர்த்தனை குறித்து லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவிக்கையில், “நாங்கள் ஸ்பெயினுக்குள் நுழைந்தபோது, நாட்டின் மிகப் பெரிய MVNO ஐ அதிஉயர் தரமான சேவையாகவும் குறைந்த கட்டணத்திலான தொலைத்தொடர்புச் சேவையாகவும் கட்டியெழுப்ப வேண்டும் என்றே கனவு கண்டோம். அந்தக் கனவு நனவாகி இப்போது அந்த பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறினார்.

“இதன் மூலம் ஸ்பெயினில் லைக்கா தொலைத்தொடர்புச் சேவையை மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம் கொள்வனவு செய்வதென்பது, லைக்காவின் உலகளாவிய வெற்றியை உறுதிப்படுதிப்படுத்தி உள்ளது.

“அத்துடன் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம், லைகாமொபைல் இலட்சினையை (Brand) நீண்ட காலத்துக்குத் தக்கவைத்துக் கொள்ள இணங்கியிருப்பது, லைக்காவின் நிறுவனத்தின் பெருமிதமாகவும் கொள்ளப்படுகின்றது. 

“இதேவேளை மாஸ்மோவில் நிறுவனம் (Masmovil) ஸ்பெயினில் மிகச் சிறந்த மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வளர்ச்சி அடையவேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

இவ்வாறான தொடர் வெற்றிகளைத் தனதாக்கும் லைக்கா நிறுவனம் தொடர்ந்தும் உலக அளவில் 23 நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தைகளில் பிரமாண்ட செயற்பாட்டை தக்கவைத்துள்ளதுடன், புதிய நாடுகளில் தனது சேவையை விரிவாக்கும் உற்சாகமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. 

இந்தப் புதிய நுழைவுகளின் மூலம் லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) உலகளாவிய இருப்பைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளது. 

மேலும் உகண்டாவில் அண்மையில் ஆரம்பித்த MNO சேவையின் மூலம் தெலைத்தொடர்பு தொழில்துறையில் லைகாமொபைல், தனது அடுத்த கட்ட நகர்வையும், திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .