2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

யாழ். ஹற்றன் நஷனல் வங்கி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை ஹற்றன் நஷனல் வங்கியின் யாழ். மாவட்ட அலுவலகத்தின்  புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள வங்கிக்குச் சொந்தமான காணியில் நடைபெற்றது.

யாழ்ப்பணம் நகரப் பகுதியில் கடந்த பல வருடங்களாக ஹற்றன் நஷனல் வங்கி போதிய இடவசதியின்றி இயங்கி வந்த நிலையில் இன்று புதிய ஜந்து மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும்  பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான இராஜேந்திரா தியாகராசாவினால் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் பிரதிப் பொதுமுகாமையாளர் மனிதவலு முகாமைத்துவம்  ஜே.ஆர்.பி.எம்.பாய்வா, மனிதவலு சிரேஷ்ட முகாமையாளர் திருமதி கே.பாலசுப்பிரமணியம், வடபிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் ரி.ஜெயராஜசிங்கம் உட்பட யாழ். மாவட்ட ஹற்றன் நஷனல் வங்கி கிளைகளின் முகாமையாளர்கள், அலுவலர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • a v beadle Wednesday, 13 April 2011 02:30 PM

    a dream came to a reality after 30 years . all the best beadle

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X