2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

MphasiS நிறுவனத்தின் செயற்பாடுகள் இலங்கையில் ஆரம்பம்

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் MphasiS  நிறுவனம், இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. MphasiS  நிறுவனத்தின் இலங்கை காரியாலயத்தை இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் MphasiS  நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கணேஷ் ஐயரும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்து MphasiS நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதியில் அறிவித்திருந்தது. இவ்வறிப்பை தொடர்ந்து கொழும்பில் தமது காரியாலயத்தை நிறுவுதல் மற்றும் உள்நாட்டு ஊழியர்கள் தெரிவும் MphasiS  நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 3 ஆண்டு காலப்பகுதியில் 2000 இற்கும் அதிகமான உள்நாட்டவர்களை வேலைக்கமர்த்த MphasiS   நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொழும்பு 09, டனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள ஒராயன் சிற்றியில் நிறுவப்பட்டுள்ள MphasiS  நிறுவனத்தின் இலங்கை காரியாலயம், ஆப்ளிகேஷன்கள், BPO, ITO சேவைகளை உலகம் பூராகவுமுள்ள தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

38,000 க்கும் அதிகமான ஊழியர்களுடன் MphasiS  நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆசியா பசுபிக், ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற பிராந்திய நாடுகளில் தமது காரியாலயங்களை கொண்டுள்ளது. இலங்கையின் MphasiS  நிறுவனத்தின் ஊழியர்களும் சர்வதேச வலையமைப்பில் இணைக்கப்பட்டு ஏனைய பிராந்தியத்தை சேர்ந்த ஊழியர்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில், 'இந்நாள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். MphasiS  நிறுவனத்தின் இலங்கை செயற்பாடுகள் ஆரம்பிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் உந்து சக்தியாக அமையும். MphasiS  போன்ற நிறுவனங்கள் எமது இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. சர்வதேச வர்த்தக வலையமைப்பில் இலங்கைக்கு கேந்திர இடத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும்' என்றார்.

MphasiS நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கணேஷ் ஐயர் இங்கு கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் காணப்படும் சிறந்த திறமையானவர்களின் எண்ணிக்கை எமக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இலங்கையின் திறமையானவர்களை உருவாக்கும் அமைப்புகளுடன் சிறந்த உறவுகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்த பங்களிப்பை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையை மீளகட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முகமாக இலங்கை முதலீட்டு சபையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .