Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் போர்ச்சூழல் நிறைவுக்கு வந்ததன் பின்னர், எழுந்த அமைதியான சூழலை கவனத்தில் கொண்டு வந்து கொழும்பின் வானளாவிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், பிரதான நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கூட அடுக்குமாடி குடியிருப்புகள் தோன்றத் தொடங்கின. அண்மைய நெருக்கடியான காலப்பகுதிகள் மற்றும் சில கொள்கை வகுப்பாளர்களின் மோசமான முடிவுகளாலும் கூட, இலங்கையின் சொத்து சந்தை தொடர்ந்து வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வளர்ச்சிக்கு நாட்டின் இயற்கை அழகு மற்றும் வலுவான தேவை இதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. சொகுசான அடுக்குமாடி குடியிருப்புகளின் எழுச்சி இந்த வெற்றிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தற்போது, கொழும்பு நகரில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் தர அடுக்குமாடி குடியிருப்பு அலகுகள் சுமார் 14,000 உள்ளன. மேலும் 2,566 அலகுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ளன. கொழும்பைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில், சுமார் 9,000 க்கும் மேற்பட்ட முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு அலகுகள் உள்ளன. மேலும் 3,013 அலகுகள் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்படும் நிலையில் உள்ளன. இவ்வாறான குறிப்பிடத்தக்க விநியோகம் காணப்பட்டாலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை வலுவாக, தொடர்ந்தும் வளர்ந்து வருகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில், இலங்கையின் பொருளாதாரம் பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டது. மேலும் பெரும்பாலான முதலீடுகள் மதிப்பை இழந்தன. இதற்கு நேர்மாறாக, அடுக்குமாடி குடியிருப்புத் துறை இந்த நெருக்கடியான காலத்திலும் உறுதியாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் சுற்றுலா பிரிவின் வளர்ச்சி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் ஆர்வம், நகரங்களுக்குச் செல்லும் மக்களின் தொகை அதிகமாக இருப்பது மற்றும் வசிக்க வசதியான இடங்களில் மலிவு விலையில் வீடுகளைத் தேடும், வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது என்பனவாகும்.
கொவிட்-19க்குப் பின்னர் சுற்றுலா மீண்டும் எழுச்சி பெற்றதாலும், வெளிநாடுகளில் வசிக்கும் பல இலங்கையர்கள் குறுகிய மற்றும் நீண்ட கால வாடகை தங்கியிருப்பிற்காக இங்கு வருவதாலும் வாடகை வருவாய் அதிகரித்துள்ளது. விடுமுறைக்கால தங்குமிடத் துறையில், பலவிதமான முன்பதிவு செயலிகளின் வருகையால் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலிகள் அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்களை முன்னணி ஹோட்டல்களுடன் போட்டியிட உதவுகின்றன. இதன் மூலம், ஹோட்டல்களுக்கு நிகராகவோ அல்லது அதைவிட கவர்ச்சியாகவோ மாற்றுத் தங்குமிடங்களை வழங்க முடிகிறது. இரண்டாவது காரணம், 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் நிர்மாணப் பணிகள் குறைந்ததாகும். இதனால், சந்தையில் ஏற்கனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்தது. வாங்குவதில் நாட்டம் காண்பித்த பலருக்கு, புதிய சந்தையில் தங்களுக்குப் பொருத்தமான குடியிருப்புகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. எனவே, குறைந்த விநியோகமும் நிலையான தேவையும் சந்தையில் விலைகளை உயரச் செய்தன.
இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த மிகவும் மோசமான நாணயப் பெறுமதி மதிப்பிழப்புக்கு மத்தியிலும், இறைமைக் கடன் நெருக்கடிக்கு முன்னர் சந்தையில் பிரவேசித்த முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள், தற்போது தங்களது முதலீடுகளின் மீதான மூலதன இலாபங்களை அமெரிக்க டொலர் மதிப்பில் முழுமையாக அடைந்துள்ளனர். இதன் விளைவாக, இலங்கையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வருமானத்தை ஈட்டுவதற்கும் நடுத்தரம் முதல் நீண்ட காலத்திற்கு மூலதன ஆதாயங்களைப் பெறுவதற்கும் மிகவும் இலாபகரமான முதலீடுகளில் ஒன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு முதலீட்டைப் போலவே, ஒரு குடியிருப்பை வாங்குவதற்கு முடிவெடுப்பதற்கு முன் சில முக்கியமான காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். சொந்தமாக குடியிருப்பதற்காக முதலீடு செய்பவர்களுக்கு, பள்ளிகள், மருத்துவமனைகள், பணிபுரியும் இடங்கள் போன்ற சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடம் மிக முக்கியமானது. இரண்டாவதாக, இறுதியான முடிவை எடுப்பதற்கு முன், குடியிருப்பைக் கட்டிய நிறுவனத்தையும் அதன் தரத்தையும் கவனமாக மதிப்பிட வேண்டும்.
சமூக, பொருளாதார மற்றும் பௌதீக உள்கட்டமைப்பு மேம்பாடுகள் எந்தவொரு பகுதியின் கவர்ச்சியையும் அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, RIUNIT ஆள் நடாத்தப்பட்ட ஆராய்வின் படி ராஜகிரியவை அடுக்குமாடி குடியிருப்பு வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ள ஒரு பகுதியாக கணித்தோம். தி ஃபெயார்வே ரெசிடென்சிஸ், ஃபெயார்வே எலிமென்ட்ஸ், ஃபேர்மவுண்ட் ரெசிடென்சிஸ் மற்றும் ஃபெயார்வே ஸ்கை கார்டன் போன்ற வெற்றிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்திய ஃபெயார்வே ஹோல்டிங்ஸால் இது சாத்தியமானது. இந்த முன்னேற்றங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச வடிவமைப்பாளர்களை இந்தப் பகுதிக்கு கவர்ந்தன. ஒரு பகுதியை மிகவும் விரும்பத்தக்கதாக மாற்றுவதில் முக்கிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பின் வளர்ச்சி முக்கியமானது. தற்போது, கொழும்பு 05 என்பது அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவாக வளரும் ஒரு பகுதி என்று எங்கள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்தப் பகுதி மிகவும் பிரபலமடைவதால், இந்தப் பகுதியில் உள்ள வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு நன்மைகளைத் தரக்கூடும். மேலும் புதுப்பிப்புகளுக்கு இந்த இடத்தைக் கவனத்தில் கொள்வனவு சிறந்தது!
முடிவாக, 22 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் ஆலோசனை சேவைகளை வழங்கி வரும் RIUNIT நிறுவனம், மக்கள் தொகை வளர்ச்சி, நடுத்தர வர்க்கத்தினரின் அதிகரிக்கும் வருமானம் மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் காரணிகளால் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு சந்தை தொடர்ந்து சாதகமான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கிறது.
மேலும், கொழும்பில் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு விகிதம், நமது பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, நீண்ட காலத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு நிர்மாணங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
RIUNIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் மடவெல கருத்துத் தெரிவிக்கையில், "அரசாங்கம் ஒரு பரந்த பொருளாதார உத்தியின் ஒரு பகுதியாக ரியல் எஸ்டேட் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இது நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை ஆராய வேண்டும். உதாரணமாக, துபாயில், அதன் விரைவான வளர்ச்சியின் காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாக மாறியது. வலுவான ரியல் எஸ்டேட் துறை நிதித் துறை ஸ்திரத்தன்மை, நிர்மாணத் துறை மற்றும் சுற்றுலாத் துறைக்கு நேரடி நன்மைகளை வழங்குகிறது. குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாடு சுற்றுலாத் துறைக்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதைக் காட்டும் தெளிவான சான்றுகள் சீஷெல்ஸ், தாய்லாந்து, பாலி, ஸ்பெயின் மற்றும் கரீபியன் போன்ற இடங்களிலிருந்து கிடைக்கின்றன. ரியல் எஸ்டேட் சந்தையை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, வீடுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் மக்களுக்கு நடுத்தர விலை வீடுகளை கட்டியெழுப்ப கட்டட நிர்மாணிப்போருக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும்.” என்றார்.
இக்கட்டுரை ரிசர்ச் இன்டெலிஜன்ஸ் யுனிட் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago