2025 மே 19, திங்கட்கிழமை

அட்லசிடமிருந்து மேலும் மூன்று AGV ரோபோக்கள்

Editorial   / 2020 மே 13 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்லஸ் அக்சிலியா கம்பனி (பிரைவேட்) லிமிடெட் மேலும் மூன்று Automated Guided Vehicle (AGV) தானியங்கி ரோபோக்களை சமீபத்தில் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இடம் ஒப்படைத்தது.

தனது உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அறிவிக்கும் இலங்கையின் முதலாவது இணையத்தினூடான பத்திரிகையாளர் மாநாட்டை அண்மையில் அட்லஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது, இந்த ரோபோக்களின் அறிமுகம் தொடர்பான விளக்கங்களை அட்லஸ் நிர்வாக குழுவினர், வைத்திய நிபுணர்கள் ஆகியோர் தெளிவுபடுத்தியிருந்தனர்.

இலங்கையில் COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ரோபோக்களான அட்லஸ் AGV இயந்திரங்கள், ஏற்கனவே COVID-19 நோயாளிகளுக்கென  அர்ப்பணிக்கப்பட்ட ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் இரனவிலவில் நிறுவப்பட்ட புதிய மருத்துவமனையிலும் செயல்பட்டு வருகின்றன. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அடங்கிய இந்த புதிய ரோபோ இயந்திரங்கள் IDH மருத்துவமனை மற்றும் கலுபோவில, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் முன்னணி எழுது பொருட்கள் உற்பத்தியாளரான அட்லஸ், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசிய சிறந்த ஆதரவை வழங்குவதற்காக, சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, கோவிட்-19 க்கு எதிரான தேசிய போராட்டத்திற்காக இந்த இயந்திரிங்ககளை உருவாக்கினர்.

மேம்படுத்தப்பட்டு புதிய AGV ரோபோக்கள் வெப்ப உணரிகள் மூலம் நோயாளியின் வெப்பநிலையை அளவிட்டு நேர முத்திரையுடன் பதிவுசெய்யும் திறன் கொண்டன. ஒவ்வொரு நோயாளியின் வெப்பநிலை பதிவுகளையும் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கைகளாகவும் மீட்டெடுக்க முடியும். ஐந்து AGV ரோபோக்களும் உள்ளார்ந்த வீடியோ கான்பரன்சிங் திறன்களுடன் நோயாளிகளை தொலைவிலிருந்து கண்காணிக்க மருத்துவர்களுக்கு உதவுவதால் இது மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துகிறது.

இந்த AGV களால் நோயாளர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கொண்டு சென்று வழங்க முடியும் என்பதால் இது மருத்துவ ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான நேரடி தொடர்பைக் மேலும் குறைக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X