2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அமானா வங்கியில் டெபிட் அட்டை உரிமையாளர்களுக்கு வெகுமதிகள்

Gavitha   / 2016 ஜனவரி 14 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டி சாராத இலங்கையின் முன்னணி உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி தனது டெபிட் அட்டை பாவனையாளர்களுக்கு, நாளாந்தம் அவர்கள் அட்டை மூலம் மேற்கொள்ளும் கட்டணங்களை மீள வழங்கும் ஓர் ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

2016 ஜனவரி 15ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் இந்த ஊக்குவிப்புக்காக நாளாந்தம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் (அதிகபட்ச மீளச்செலுத்தும் தொகை ரூபாய்  5,000). குறிப்பாக, பொருள் கொள்வனவு, உணவு, எரிபொருள், மருத்துவம், பயணம் போன்ற தேவைகளுக்காக டெபிட் அட்டையை பயன்படுத்துபவர்கள் இதற்காக தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

இந்த ஊக்குவிப்பு பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் பிரிவுக்கான துணைத் தலைவர் சித்தீக் அக்பர், ' இந்த பண்டிகைக்கால ஊக்குவிப்பின் ஊடாக எமது பண்டிகைக்கால கழிவு வழங்கல் திட்டங்களுக்கு மேலதிகமாக எமது டெபிட் அட்டை வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியளிப்பதற்காக நாம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றோம்' என குறிப்பிட்டார்.

அமானா வங்கியின் வீசா டெபிட் அட்டை என்பது ஸ்மார்ட் சிப் தொழில்நுட்பத்துடன் தகவல்களை சேமித்து செயன்முறைப்படுத்துவதனால் வாடிக்கையாளர்கள் உபயோகிக்கும்போது அவர்கள் நிதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்படுகின்றது. டெபிட் கார்ட் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் SMS அலாட்ஸ் சேவையினூடாக டெபிட் கார்ட் கொடுக்கல்வாங்கல்களை உடனடியாக அறியும் வசதியும் பெற்றுக்கொள்கின்றனர்.

வட்டி சாராத இஸ்லாமிய வங்கியியல் துறையுடன் முற்றிலும் இணங்கி செயற்பட்டு வரும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட பிட்ச் தரவரிசைக்கு அமைய BB(lka) இல் வங்கியின் நீண்டகால தேசிய தரப்படுத்தலை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணைவாக 2014ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வொஷpங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி அங்கீகரிக்கப்பட்டது. தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X