2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஆசிரி வைத்தியசாலை குழுமம் வழங்கும் ஆரோக்கிய சலுகை

A.P.Mathan   / 2016 பெப்ரவரி 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி ஆசிரி வைத்தியசாலைகள் குழுமத்துடன் இணைந்து தனது வாடிக்கையாளரான சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் பெண்களுக்கென தெரிவு செய்யப்பட்ட நோய் கண்டறியும்சேவைகளுக்கு சலுகைப் பொதிகளை வழங்க முன்வந்துள்ளது. மேற்படி இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பமிடப்பட்டுள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் பெண்களுக்கான அனகி சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கும், உதார சேமிப்பு  நிலையான பணவைப்பு கணக்குகளை பேணும் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் ஆசிரி வைத்தியசாலையின் நலன்புரி நிலையங்கள் நான்கிலும் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

இச்சிறப்புக் கழிவு சலுகையானது 2016 டிசம்பர் 31ஆம் திகதி வரை கொழும்பு - 05, கிரிமண்டல மாவத்தை, ஆசிரி வைத்தியசாலையிலும், கொழும்பு - 10இல் உள்ள பிரதான வைத்தியசாலையிலும், மாத்தறையிலுள்ள இரு ஆசிரி வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப் பெறும் உரித்தாளிகளுக்கு உரியதாகும்.

மேற்படி சிறப்புக்கழிவானது, 40 வயதிற்கு உட்பட்ட மற்றும் மேற்பட்ட அனகி சேமிப்பு கணக்கை பேணிவரும் வாடிக்கையாளர்கள் தமது புற்றுநோய் மருத்துவ பரிசோதனைகள் விடயத்திலும் வழங்கப்படும்.

உதார கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்கள் உடல்நலப் பரிசோதனை, ஆண்கள் உடல்நலப் பரிசோதனை, புற்றுநோய்குறிகாண் பரிசோதனை, இருதயநோய் பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை என்பன அடங்குகின்றன.

ஒரு அனகி டெபிட் அட்டையை கொடுப்பனவுக்கென பயன்படுத்தும் போது அல்லது ஒரு கருமபீடத்தில் சமர்ப்பிக்கும் போது அல்லது ஒரு உதார சிரேஷ்ட பிரஜைகள் அட்டையை வைத்தியசாலையில் சமர்ப்பிக்கும் போது கழிவு சலுகையை ஒருவர் பெறமுடியும். 

ஆசிரி வைத்தியசாலைகள் நிறுவன பிரதம அதிகாரி டாக்டர் மஞ்சுளா கருணாரத்ன இது பற்றி கூறுகையில், வாடிக்கையாளர்களின் நலன்களை மேம்படுத்துவதில் கொமர்ஷல் வங்கி முன்னெடுக்கும் இத்திட்டம் பாரட்டப்பட வேண்டியது. மிகப்பெரிய சுகாதார சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனமான ஆசிரி கொஸ்பிட்டல், மிகப்பெரும் தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து செயற்படுவது பொருத்தமானதாகும் எனத்தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஃ நிறைவேற்று அதிகாரி எஸ்.ரெங்கநாதன், வங்கியின் பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) ஹஸ்ரத் முனசிங்க, ஆசிரி வைத்தியசாலைகள் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் மஞ்சுள கருணாரத்ன மற்றும் ஆசிரி வைத்தியசாலையின் சந்தைப்படுத்தல் தலைவர் தசரத் ஹெட்டியாராச்சி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அனகி பெண்கள் சேமிப்பு கணக்கு மிகச்சிறந்த வட்டி வீதத்தினை அளிக்கிறது. ஆபரணங்களை கொள்வனவு செய்வதற்கான தங்க நகை கடன்கள், பொருட் கொள்வனவுக்கான Combank டெபிற் அட்டை என்பனவற்றையும் வழங்குகிறது. ரூபா 1000 த்தினை வைப்பு செய்வதன் மூலம் ஒரு அனகி கணக்கினை ஆரம்பிக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X