Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 05 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிற்துறைகளை தொடர்ச்சியாக பேணும் வகையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்களில் ஆடைத் தொழிற்துறைக்கு எவ்விதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என்பதால், ஒரு கால கட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கிய ஆடைத்தொழிற்துறை தற்போது பெரும் சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது என இலங்கை ஆடைகள் ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தவிசாளர் ரெஹான் லக்ஹானி தெரிவித்தார்.
இந்த நிவாரணம் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியிருந்ததை தொடர்ந்து, இதுவரையில் எந்தவொரு ஆடைத் தொழிற்துறையைச் சேர்ந்த நிறுவனத்துக்கும் எந்தவொரு கடன் வசதியையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. வருடமொன்றின் ஆகக்கூடிய புரள்வு பெறுமதியான 1 பில்லியன் ரூபாய் எனும் நிபந்தனையின் காரணமாக, சுமார் 90 சதவீதமான நிறுவனங்கள் இந்த நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான தகைமையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாறு கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள், தமது நிறுவனத்திலிருந்து எந்தவொரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யாமலிருக்க வேண்டும் என்பதன் காரணமாக, இவ்வாறு பெற்றுக் கொள்ளும் பணத்தை, ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்கு பயன்படுத்த வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.
இது சாத்தியமற்றது என தெரிவித்துடன், இலங்கை மத்திய வங்கியிடமிருந்து இந்த கடன் கிடைப்பதற்கான எவ்விதமான உத்தரவாதங்களும் வழங்கப்படவில்லை, வங்கிகள் கடன் வழங்குவதற்கு, ஆதாரங்களை கோருகின்றன. பெருமளவான நிறுவனங்கள் ஏற்கனவே கடன் பெற்றுள்ள நிலையில், தமது ஆதாரங்களை அந்த கடனை பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தியுள்ளன. ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்தும் காலத்தை தாமதிக்கும் அனுகூலத்தை சில வங்கிகளினால் சில நிறுவனங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பல நிறுவனங்கள் மே மாதம் வரை ஊழியர்களுக்கு சம்பளக் கொடுப்பனவை மேற்கொள்ளும். அதன் பின்னர், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான ஓடர்கள் இரத்தானமை காரணமாக, இந்த நிறுவனங்கள் தொடர்ந்து நிலைத்திருப்பது தொடர்பில் சவால்களுக்கு முகங் கொடுக்கும்.
இந்த இடர் நிலையை சமாளிப்பதற்கு, தற்போது அமலிலுள்ள ஊழியர் சட்ட விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு அரசாங்கத்தை ஆடைத் தொழிற்துறை நிறுவனங்கள் நாடியுள்ளன. இதன் போது, தமக்கு ஓடர்கள் இல்லாத நிறுவனங்கள், தமது ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவது, ஆறு மாத காலப்பகுதிக்கு ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பை இடை நிறுத்துவது மற்றும் பணியின்றி இருக்கும் ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை நிறுவனங்கள் அல்லது அரசாங்கம் மேற்கொள்வது போன்ற கோரிக்கைகள் இதில் அடங்கியுள்ளன.
தொழிற்சங்கங்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும், ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் தொழிலை வழங்குவதற்கு தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்க வேண்டும். சில தொழிற்சங்கங்கள் இந்த ஏற்பாட்டை ஏற்றுள்ளன. சில உடன்பாட்டுக்கு வர மறுக்கின்றன என அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago