2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

ஆர் எம் பெரேரா பிரைவட் லிமிடெட்டுக்கு ISO சான்றிதழ்

S.Sekar   / 2021 நவம்பர் 19 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரத் தளபாடங்கள் தயாரிப்பாளர்களும், உள்ளக அலங்கார வடிவமைப்பாளர்களுமான ஆர் எம் பெரேரா பிரைவட் லிமிடெட், ISO 9001:2015 சான்றைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர் தன்னிறைவை உறுதி செய்யும் வகையில் நிறுவனத்தினால் உயர் நியமங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் தனது செயன்முறைகளைக் கொண்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் தர முகாமைத்துவ கட்டமைப்புகளை கொண்டுள்ளதை இந்த சான்றிதழ் உறுதி செய்துள்ளது. நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சகல செயற்பாடுகளிலும் தரத்தை மேம்படுத்துவது, நிர்வகிப்பது போன்றவற்றை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆர் எம் பெரேரா, உயர் தரத்தைப் பின்பற்றி, வினைத்திறனான வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு ISO சான்றிதழ் கிடைத்துள்ளமையானது அதன் நீண்ட கால செயற்பாடுகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக அமைந்துள்ளது.

ஆர் எம் பெரேரா பிரைவட் லிமிடெட் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “எமது வியாபாரத்தின் சகல பிரிவுகளிலும் உயர் நியமங்களை பின்பற்றியுள்ளமைக்காக எமக்கு சுயாதீன கௌரவிப்பு கிடைத்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ISO 9001 நியமங்களின் கடுமையான தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்துள்ளதனூடாக, பரிபூரண வாடிக்கையாளர் தன்னிறைவு மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் எமது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியைச் சேர்ந்த அனைவரும் தரத்துக்கு முன்னுரிமையளிப்பது என்பதை புரிந்து கொண்டுள்ளதுடன், நியமங்களை பின்பற்றி செயலாற்றுகின்றனர். தர முகாமைத்துவ கட்டமைப்பினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நியமங்களை விஞ்சும் வகையில் செயலாற்றுவதற்கும் நாம் அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள நவீன வசதிகள் படைத்த உற்பத்தி ஆலையை ஆர் எம் பெரேரா (பிரைவட்) லிமிடெட் கொண்டுள்ளது. குடிமனைகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள் மற்றும் தொடர்மனைத் தொடர்களுக்காக Trendline மற்றும் One80 ஆகிய வர்த்தக நாமங்களில் தளபாடங்கள் உற்பத்தியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் உள்ளக அலங்கார வடிவமைப்புத் துறையில் நிறுவனம் தன்னை ஈடுபடுத்தி வருவதுடன், இலங்கையின் கட்டிட வடிவமைப்பாளர்களுடன் இணைந்து, தளபாடத் தெரிவுகள் மற்றும் உள்ளக அலங்காரத் தெரிவுகளை வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X