2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஆர்பிகோ மெட்ரஸ் 'வார இறுதி ஜோடி'

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வார இறுதி ஜோடிகள்' அதிர்ஷ்டசாலி 40 பேருக்கு சொகுசான முறையில் தமது விடுமுறையை கொண்டாடுவதற்கான வாய்ப்பை வழங்க ஆர்பிகோ மெட்ரஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. கடந்த ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்த போட்டிக்காக தெரிவாகும் முறை மிகவும் எளிமையானதாக அமைந்திருந்தது. தெரிவு செய்யப்பட்ட ஆர்பிகோ Hybrid, Breathe Back, Hard Back, Comfy Back, Silver Star, Gold Star, Gold Star Quilted, Cool Star Quilted, Super Cool அல்லது எந்தவொரு யுசிiஉழ ளுpசiபெ மெட்ரஸ் வகைகளை ஜுன் மாதம் 26 முதல் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் கொள்வனவு செய்திருந்தால் அவர்கள் இந்த பேட்டி தெரிவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த  நூற்றுக் கணக்கான ஆர்பிகோ வாடிக்கையாளர்கள் இதற்கு விண்ணப்பித்திருந்ததுடன், ஜுலை 13 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் வெற்றியீட்டிய ஜோடிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன. 

இந்த 'வார இறுதி ஜோடிகள்' போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜெட்விங் ஹோட்டல்ஸ்களில் சிறந்த ஹோட்டல் ஒன்றை தெரிவு செய்து சொகுசான முறையில் தமது இரு நாள் விடுமுறையை களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிலர் ஜெட்விங் ப்ளு நிகம்போ, ஜெட்விங் சீ நிகம்போ மற்றும் மாத்தறை ஜெட்விங்அமலோ தங்கியிருந்தனர். ஏனையவர்களுக்கு நுவரெலியா சென். அட்ரிவ்ஸ்;,சிலருக்கு ஜெட்விங் யால ஹோட்டலில் தங்கியிருந்தனர். 

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் ஆர்பிகோ மெட்ரஸ்கள் பிரிவின் தலைமை அதிகாரி துஷார எகொடகே, கருத்து வெளியிடுகையில், 'இலங்கையின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமாக ஆர்பிகோ திகழ்கிறது. 80 ஆண்டுகளில் எமது பொருட்கள் பல தலைமுறைகளின் தேவைகளை நிவர்த்தி செய்துள்ளன. பல இலங்கையர்களின் தினசரி வாழ்வின் ஒன்றிணைந்த அங்கமாக ஆர்பிகோ மெட்ரஸ் அமைந்துள்ளது. வேகமாக விரிவடைந்து செல்லும் எமது பொருட்கள் கட்டமைப்பின் வெற்றியில் அவர்களின் வரவேற்பு பெரும் பங்களிப்பு வழங்கியிருந்தது. 'வார இறுதி ஜோடிகள்' போட்டியின் மூலமாக ஆர்பிகோ வாடிக்கையாளர்கள் குதூகலித்து மகிழ்வதற்கு சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது' என்றார்.

Foam அல்லது spring மாதிரிகளில் வரும் ஆர்பிகோ மெட்ரஸ் வகைகளை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இவை நவீன தொழில்நுட்பம் மற்றும் துறைசார் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் உற்பத்தி செய்யப்படுகின்றன. SLS அங்கீகாரத்தைப் பெற்ற மற்றும் ISO தரச்சான்றைப் பெற்ற முதல் மெட்ரஸ் நாமமாக இது அமைந்துள்ளது. 

83 வருட பாரம்பரியத்தினை கொண்டுள்ள ரிச்சர்ட் பீரிஸ் பிஎல்சி நிறுவனமானது இலங்கையின் மிகவும் வெற்றிகரமான வர்த்தக செயற்பாடுகளை கொண்ட பாரிய நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. தனியார் துறையில் மிக பாரிய தொழில் வழங்குனராக செயற்படும் இந்நிறுவனமானது 35,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் அங்காடிகள், பெருந்தோட்டத்துறை, டயர் உற்பத்தி, பங்குத்தரகு, பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை ஆகிய துறைகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதுடன் இலங்கையின் ஈடு இணையற்ற தொழிற்துறை நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அனைவரின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமான இந்நிறுவனம் நாடு முழுவதும் தனது செயற்பாடுகளை வியாபித்துள்ளதுடன் இலங்கையின் கிராமங்கள் மற்றும் நகரங்கள்தோரும் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது. 'ஆர்பிகோ' எனும் வர்த்தக நாமத்தின் மூலம் பிரத்தியேக மற்றும் தனித்தன்மயுடைய சேவை வழங்கல் மூலம் மக்கள் நன்மதிப்பினையும் வெகுவாக பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X