S.Sekar / 2021 ஜூன் 07 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா முதலீட்டு அமர்வு இன்று (07) காலை 8.30 மணி முதல் மெய்நிகர் நிகழ்வாக இடம்பெறுகின்றது. மூன்று நாட்கள் இடம்பெறும் இந்த நிகழ்வை முதலீட்டு சபை, இலங்கை வர்த்தக சம்மேளனம், கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஆசியாவின் முதலாவது மற்றும் மாபெரும் மெய்நிகர் அமர்வாக இது அமைந்துள்ளதுடன், நாட்டினுள் வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. இலங்கையில் காணப்படும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனச் சந்தை வாய்ப்புகள் தொடர்பான பரிபூரண புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கும்.
முதல் நாள் நிகழ்வை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஆரம்பித்து வைத்ததுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் நிகழ்வுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதி மற்றும் மூலதனச் சந்தை மற்றும் அரச நிறுவனங்கள் மீளமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜத் நிவார்ட் கப்ரால் ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்வர்.
கொள்கை வடிவமைப்பாளர்களுடன், இந்த அமர்வில் சர்வதேச பேச்சாளர்களான உலக வங்கியின் மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹதாத்-செர்வொஸ், அக்சியாடா குரூப் ஒஃவ் பெர்ஹாட் முகாமைத்துவ பணிப்பாளர்/தலைவர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி டத்தோ இஸ்ஸதீன் இதிரிஸ், லண்டன் ஸ்டொக் எக்ஸ்சேன்ஜ் குரூப் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ஸ்விம்மர், ஷங்கிரிலா ஏசியா லிமிடெட் தவிசாளரும் நிறைவேற்று அதிகாரியுமான ஹுயி குவோக், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய உப தலைவர் அல்ஃபோன்சோ கார்சியா மோரா, பொஸ்டன் கன்சல்டிங் குரூப் முகாமைத்துவ பணிப்பாளரும் பங்காளருாதான பிரதீக் ரூங்க்டா ஆகியோருடன் மேலும் சில சர்வதேச பேச்சாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
36 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
1 hours ago