2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இலங்கைக்கு அவசியமான சுகாதார பராமரிப்பு உதவியை ஜப்பான் வழங்கியது

Freelancer   / 2024 மார்ச் 04 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலைகளில் காணப்படும் மின்வலுப் பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு அவசியமான 40,000 மெட்ரிக் டொன் டீசலை, இலங்கைக்கான ஜப்பானிய தற்காலிக தூதுவர் கட்சுகி கொடாரோ கையளித்திருந்தார். நோயாளர்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் சிகிச்சைகளுக்காக கொண்டு செல்கை போன்ற போக்குவரத்து வசதிகளிலும் இந்த எரிபொருள் பயன்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் கலாநிதி. ரமேஷ் பத்திரன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர். பி.ஜி.மஹீபால ஆகியோர் கலந்து கொண்டு, இரு நாடுகளுக்குமிடையிலான உறுதியான பிணைப்பை வெளிப்படுத்தியதுடன், இலங்கையில் சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்பு வசதியை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கையின் வலு நெருக்கடிக்கு தீர்வை வழங்கும் வகையில், ஜப்பானிய அரசாங்கத்தினால் 5 மில்லியன் யென் மானிய உதவி இலங்கையின் சுகாதார பராமரிப்பு சேவைகளுக்கு டீசல் வழங்க அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட டீசல் அவசர சிகிச்சை வாகனங்களில் பயன்படுத்தப்படும் முதல் தினமாக இன்று அமைந்திருந்தது. இன்றைய நிகழ்வுக்கு முன்னதாக, தூதுவர் மிசுகொஷி மற்றும் இலங்கையின் சுகாதார மற்றும் துறைமுக அமைச்சர்கள், பெப்ரவரி 19ஆம் திகதி எரிபொருள் வருகையை ஏற்று வரவேற்றிருந்தனர்.

பதில் தூதுவர் கட்சுகி தமது உரையில், “இந்த எரிபொருள் தொகை, இலங்கை முழுவதிலும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதுடன், அதனூடாக பரந்தளவு சமூகத்தார் நலன்பெறுவர். இலங்கையின் சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்பை வலிமைபப்டுத்துவதில் இந்த ஆதரவு பெருமளவில் கைகொடுக்கும் என நாம் கருதுவதுடன், அதனூடாக நாட்டு மக்களின் நலனை மேம்படுத்தும்.” என்றார்.

இந்த எரிபொருள் வருகையினூடாக எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கப்படும். நோயாளர் காவு வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கவும், நாடு முழுவதிலும் சுகாதார பராமரிப்பு வசதிகளின் மிருதுவான செயற்பாட்டுக்கும் பங்களிப்பு வழங்கப்படும். நாம் வரவேற்று, ஒன்றிணைந்து கொண்டாடும் முன்னேற்றமாக இது அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X