Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கியின் 2017ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த நிதியறிக்கையான “ABC of BOC”க்கு தெற்காசிய கணக்கியலாளர் சம்மேளனத்தின் (SAFA) பொதுத் துறை வங்கிகளால் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த வருடாந்த நிதி அறிக்கைக்கான விருதை பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வு இந்தியாவின், புனே நகரில் அண்மையில் நடைபெற்றது.
வங்கியின் நிதி, திட்டமிடலுக்கான பதில் பொது முகாமையாளரான விபுல ஜயபாகு இந்த விருதை Indian Institute of Cost and Management Studies and Research இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசோக் ஜோஷ் இடமிருந்து பெற்றுக் கொண்டார்.
சார்க் அமைப்பின் துணை அமைப்பாக, தெற்காசிய கணக்கியலாளர் சம்மேளனம் (SAFA) திகழ்வதுடன், சர்வதேச கணக்கியலாளர் சம்மேளனத்தின் (IFAC) அங்கிகாரத்தையும் பெற்றுள்ளது.
இந்த விருதுகள் நிதி அறிக்கையிடலில் வெளிப்படுத்தல், ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், மேலாண்மை போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச கணக்கியல் நியம சபையால் (IASB) பரிந்துரைக்கப்பட்ட கட்டமைப்புக்கமைய, நிதி அறிக்கைகளைத் தயாரிக்கும் போது, எதிர்பார்க்கப்படும் சிறப்பை எய்தியுள்ளமையை கௌரவிக்கும் வகையில் ‘SAFA Awards’ அமைந்துள்ளன.
வெவ்வேறு பிரிவுகள் விருதுகள் வழங்கப்படுவதுடன், பொதுத் துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், காப்புறுதித் துறை, நிதிச் சேவைகள் துறை, உற்பத்தித் துறை, தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பத் துறை, சேவைகள் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள், விவசாயத் துறை போன்றன இதில் அடங்கும் துறைகளாகின்றன.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago