Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 07 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை உணவு பதப்படுத்தல் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழுவை MA's ட்ரொபிகல் ஃபூட் புரொசஸிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மலிக் டி அல்விஸ் தலைமை தாங்கியிருந்தார். இவர் இதற்கு முன்னர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளதுடன், கடந்த ஆண்டுகளில் SLFPA இனுள் பல்வேறு அனர்த்த நிலைமைகளின் போது தன்னார்வ தொண்டர் தலைமைத்துவ பதவியை வகித்துள்ளதுடன், நிர்வாக சபையின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.
தனது புதிய நியமனம் குறித்து டி அல்விஸ் கருத்து தெரிவிக்கையில், 'SLFPA இனை தலைமை தாங்குவது எனக்கு சவால் நிறைந்ததாகவுள்ளது. இந்த சங்கத்துடன் கடந்த பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றியதனூடாக அதன் அங்கத்தவர்கள் மீது பெரும் மதிப்பை நான் கொண்டுள்ளேன். எமது துறைக்கு உறுதியான பங்காண்மை அவசியமாகவுள்ளதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் முக்கிய பல இலக்குகளை நாம் கொண்டுள்ளோம். இந்த தொழில்துறையின் வளர்ச்சிக்காக உறுதிப்பாட்டுடன் செயற்படவுள்ளதுடன், இத்துறையின் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் உணவு மற்றும் குடிபான துறைக்கான ஒரு குரலாக இருக்கவுள்ளோம்' என்றார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, 'உள்நாட்டு சந்தையில் உணவை பாதுகாப்பாக பதப்படுத்தல், தரங்களை மேம்படுத்த உதவுதல் மற்றும் அங்கத்தவர்கள் மத்தியில் ஏற்றுமதி மட்டத்தை உயர்த்தல் போன்ற பல்வேறு பிரிவுகள் தொடர்பில் கவனம் நாம் செலுத்தவுள்ளோம்' என்றார்.
இந்த சங்கத்தின் கடந்த கால வளர்ச்சி குறித்து தெரிவித்த அவர், 'இந்த சங்கமானது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒருசில உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும நடுத்தர அளவிலான உள்நாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பிரதிநிதியாக தொடங்கப்பட்டது. இன்று எமது அங்கத்துவத்தில் சிறியது முதல் நடுத்தரவு மற்றும் பாரிய பன்னாட்டு நிறுவனங்கள் வரை உள்ளடக்கப்பட்டுள்ளன' என்றார்.
'SLFPA ஆனது தொழிற்துறையில் அங்கத்தவர்களை ஒன்றிணைத்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதுடன், அரசாங்க குழுக்கள் மற்றும் கொள்கை வெளியீட்டு கலந்துரையாடல்களின் போது முக்கிய பங்குதாரராக கலந்து கொள்வதுடன், நாட்டின் பதப்படுத்தல் உணவு துறைக்கு தலைமைத்துவத்தையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறது' என மேலும் அல்விஸ் குறிப்பிட்டார்.
'ஒட்டுமொத்த துறையிலும் மிகச்சிறந்த தொடர்பாடலை அமைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். தற்போது நாம் சிறிய மற்றும் மிகச்சிறிய நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணுவதற்கான கட்டமைப்பினை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். தேசிய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பகுதிகளில் ஒன்றாக உணவு மற்றும் குடிபான பிரிவு அமைந்துள்ளதுடன், இத்துறையின் மிகப்பெரிய பிரிவானது மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர அளவுகளில் காணப்படுகின்றன. கட்டுப்பாடுகள் மாற்றமடையும் போது அவர்களே மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு இறுதியாக அறியக்கிடைத்தல், குறைந்த அறிவு மற்றும் ஏற்கும் திறன் போன்றன காரணங்களாக அமைந்துள்ளன' என மேலும் அவர் தெரிவித்தார்.
இதன் போது Country Style Foods இன் திரு.சரத் அலஹகோன் தலைவராகவும், Trans Continental Packaging மற்றும் Commodities இன் திரு.துசித விஜேசிங்க மற்றும் Mead Lee Trading இன் திரு.நதிஷன் குருகே ஆகியோர் முறையே செயலாளர் மற்றும் சங்கத்தின் பொருளாளர் பதவிகளை ஏற்றதுடன், திரு.சுமித் பொன்னம்பெரும(கட்டுப்பாட்டு சங்க ஆய்வு), திரு.வசந்த சந்த்ரபால(சிலோன் பிஸ்கட்ஸ்) மற்றும் திரு.நிஷான் பெரோ (CMC பொறியியல்) ஆகியோர் புதிய உப தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
SLFPA ஆனது ஆண்டு முழுவதும் அரச துறைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உணவு பாதுகாப்பு தரங்கள், ஆரோக்கியம், முறையான பொதியிடல் முறைகள் போன்ற தலைப்புகளின் கீழ் பல்வேறு செயலமர்வுகள், விழிப்புணர்வு மற்றும் பயிற்சி திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
பரந்துபட்ட பங்குதாரர்களை கவரும் வகையிலான உள்நாட்டு உணவு பதப்படுத்திகள் மற்றும் பொதியிடல் நிறுவனங்களை வெளிப்படுத்தும் பரந்தளவிலான உணவு, குடிபான மற்றும் பொதியிடல் கண்காட்சியாக SLFPA இன் வருடாந்த Pro Food Pro Pack கண்காட்சி திகழ்கிறது. உள்நாட்டு உணவுத்துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி மற்றும் நடைமுறை பயிற்சி வகுப்புகளை வழங்கி உணவு பதப்படுத்தலில் அறிவியலுடன் சம்பந்தப்பட்ட நிபுணத்துவ நிறுவனமான உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியகம் (IFSTSL) உடன் இணைந்து இச்சங்கம் செயலாற்றி வருகிறது. SLFPA ஆனது தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் அடிப்படை உணவு கையாளல் முறைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago