Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
TVS கம்பனியினால், புதிய Apache 200cc மோட்டார் சைக்கிள் தெரிவு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெருமளவு விருதுகளை சுவீகரித்த வர்த்தக நாமமான Apache, பத்து தடவைகள் “ஆண்டின் சிறந்த மோட்டார் சைக்கிள்” எனும் விருதை பெற்றுள்ளது. அத்துடன், NDTV ன் “2017ம் ஆண்டின் மோட்டார் சைக்கிள்” எனும் விருதையும் பெற்றுள்ளது. மவுன்ட்லேவ்னியா கடற்கரை பகுதியில் ஹெலிகப்டர் ஒன்றின் மூலமாக இந்த மோட்டார் சைக்கிள் கொண்டு வரப்பட்டு, கோலாகலமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
அறிமுக நிகழ்வில், TVS லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “பெரும் வரவேற்பைப் பெற்ற, கண்கவர் வடிவமைப்பு, தொழில்நுட்ப ரீதியில் ஒப்பற்ற மற்றும் மிகவும் மதிநுட்பமான மோட்டார் சைக்கிள் ரகமாக, Apache அமைந்துள்ளது. இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் கொண்டுள்ளது.
இந்த பிரிவில் புரட்சியை படைக்கும் வகையிலமைந்துள்ள TVS Apache உயர் வடிவமைப்பை கொண்டுள்ளது. கண்கவர் கிராஃபிக் வடிவமைப்புகளையும் கொண்டுள்ளது. TVS லங்கா, புதிய மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்களை இலங்கைக் கொண்டு வருவதில் முன்னணியில் திகழ்கிறது. நிறுவனம், நவீன பொறியியல்நுட்பம், உயர் தொழில்நுட்பம் மற்றும் உயர் தரம் ஆகியவற்றை தனது தயாரிப்புகளில் கொண்டுள்ளது. எமது வாடிக்கையாளர்கள் மீதான கரிசனை எமது பிரதான இலக்காகும். உறுதி மொழியான, பிரத்தியேகமான தயாரிப்புகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்பதற்கமைய, இந்த அறிமுகம் அமைந்துள்ளது” என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago