Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 17 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் நம்பகமான உணவு பதனிடல் நிறுவனமாக திகழும் Ma’s ஃபூட்ஸ் நிறுவனம் அதன் உயர்ரக மற்றும் நெறிமுறைக்கமைவான வர்த்தக உணவு மூலப்பொருட்களை வழங்கிவரும் சப்ளையர் எனும் ரீதியில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தடவையாக Flo Cert International மூலம் ‘Fair Trade’ சான்றிதழை பெற்றதுடன், அன்றிலிருந்து இலங்கை விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வின் மேம்பாடு நோக்கிய தொடர்ச்சியான பங்களிப்புகளை வழங்கி வருகிறது.
விவசாயிகள் தமது உற்பத்திகளை ‘Fair Trade’ விதிமுறைகளுக்கேற்ப விற்பனை செய்யும் போது வர்த்தகம் தொடர்பாக மேம்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் வெளிப்படையான விதிமுறைகள் வழங்கப்படுவதுடன், தமது எதிர்காலத்திற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. பாவனையாளர்கள் தமது அன்றாட ஹோப்பிங் ஊடாக உலக வறுமையை குறைப்பதற்கான மிகவும் சக்திமிக்க வழியாக ‘Fair Trade’ உள்ளது. இந்த வருட 'உலக உணவு தினம்' இல் உள்நாட்டு விவசாயிகள் தொடர்பான தமது கவனம் குறித்து Ma’s கலந்துரையாடியிருந்தது.
‘Fair Trade’ சான்றளிக்கப்பட்ட நிறுவனம் என்ற தகுதியை பெறுவதற்கு, ஊழியர் தரநிலைகள், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் தேவைகளுக்கான விவசாய நிறுவனங்களுக்கு 'ப்ரீமியம்' கொடுப்பனவு உள்ளிட்ட குறைந்தது சில தரநிலைகளை வியாபாரிகள் பின்பற்றியிருத்தல் வேண்டும். இந்த 'குறைந்தபட்ச விலை' ஆனது விவசாயிகளுக்கு தமது நிலையான உற்பத்திகளின் சராசரி செலவுகள் ஈடுசெய்வதை உறுதி செய்கிறது. நிலையான மட்டத்திற்கு கீழே உலக சந்தை சரிவடையும் போதும், 'குறைந்தபட்ச விலை' ஐ விட சந்தை விலை உயர்வடையும் போதும் இது விவசாயிகளுக்கான 'பாதுகாப்பு வலை' ஆக செயற்படுகிறது. மேலும் ‘Fair Trade’ இல் விற்கப்படும் பொருட்களின் 'ப்ரிமீயம்' தொகையானது விவசாயிகள் மற்றும் அவர்களது பணியாட்கள் தமது சமூக, பொருளாதார மற்றும் சூழல் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் அவர்களினாலேயே நிர்வகிக்கப்பட்டு வரும் சமுதாயம் சார் நிதியைச் சென்றடைகிறது.
சட்ட விரோதமான கையாடல்கள் இடம்பெறாது மேற்கொள்ளப்படும் வெளிப்படையான சோதனைகள் மற்றும் சமநிலைகள் ஊடாக பெருவாரியான ‘Fair Trade’ பணமானது மீண்டும் விவசாயக் குடும்பங்களுக்கே சென்றடைவதால் ஓரங்கட்டப்பட்ட மற்றும் வசதிவாய்ப்பற்ற விவசாயிகள் மற்றும் அவர்களது பணியாட்கள் பயனடைந்து வருகின்றனர். ‘Fair Trade’ ஊடாக உற்பத்தியாளர்கள் சிறந்த நிலையை அடைந்துள்ளனர். மிக முக்கியமாக விவசாய சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு உதவுவதுடன், விவசாயத்தின் மூலம் நிலையான வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இளம் தலைமுறை விவசாயிகளுக்கு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
‘Fair Trade’ சான்றுப்பெற்ற நிறுவனம் எனும் ரீதியில், Ma’s ஆனது விவசாயிகளின் பங்குபற்றலுடன் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொடுப்பனவை வழங்குதல் மற்றும் சந்தையில் நிலைத்திருத்தல் ஆகியவற்றிற்கான நியாயமான விலை மீது உடன்படுகிறது. உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானம் ஈட்டுவதை உறுதி செய்யும் வகையில் சான்றளிக்கப்பட்ட நபர்கள் மூலம் 'குறைந்தபட்ச விலை' நிர்ணயிக்கப்படுகிறது. 'குயசை வுசயனந' சான்றளிப்பின் கீழ் Ma’s இனால் விற்கப்படும் உற்பத்திகளிலிருந்து சேகரிக்கப்படும் 'ப்ரீமியம்' தொகையானது உள்நாட்டு விவசாய நடைமுறைகள் மற்றும் சமூக உட்கட்டுமானம் போன்றவற்றை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ‘Fair Trade’ சான்றளிப்பின் கீழ் விற்கப்படும் உற்பத்தியின் 15% வீதமான 'ப்ரீமியம்' விவசாய நிறுவனங்களைச் சென்றடைகின்றன' என Ma’s ஃபூட்ஸ் நிறுவனத்தின் தலைமை இணக்க அதிகாரி ஷெரான் டி அல்விஸ் தெரிவித்தார்.
எமது விவசாயிகள் அவர்களது தொழிலை கொண்டாடவும், நேர்மறையான வாழ்க்கையையும் வாழ வைப்பதே எமது விருப்பமாகும். எனவே அக் குறிக்கோளை எய்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகிறோம்' என ஃபூட்ஸ் நிறுவனத்தின் தலைமை இணக்க அதிகாரி செரான் டி அல்விஸ் தெரிவித்தார்.
நிலையான விவசாயப் பண்ணை என்டர்பிரைசஸ் நெட்வொர்க் (SAFENET) இனை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் ‘Fair Trade’ நடைமுறைகளுக்கு Ma’s பங்களிப்பு வழங்கி வருகிறது. Ma’s நிறுவனம் 'சேதன' சான்றளிப்பினை கோரிய போதே இந்த வலையமைப்பு உருவாக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டில் 'சேதன' சான்றிதழை பெற்றுக்கொண்ட பின்னர் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை ‘Fair Trade’ சான்றளிக்கப்பட்ட விவசாயிகளாக உருவாக்கும் வகையிலும் ‘Fair Trade’ சான்றளிப்பு தொடர்பில் ஆய'ள விழிப்புணர்வுகைள முன்னெடுத்த வந்துள்ளது. இந்த வலையமைப்பில் சுமார் 70-80 வரையான விவசாயிகள் உள்ளதுடன், அவர்களினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விவசாயியும் ‘Fair Trade’ நடைமுறைகள் தொடர்பில் Ma’s இனால் வழங்கப்படும் பதிவேடுகளில் குறிக்கப்படுவதுடன், தரநிலை இணக்கத்தை உறுதி செய்யும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் Ma’s கள அதிகாரிகள் மூலம் அவை பார்வையிடப்படுகின்றன. Ma’s இன் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காப்பீடு மூலம் அனைத்து விவசாயிகளும், அவர்களது பணியாட்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார அடிப்படையில் ஸ்திரத்தன்மையை கொண்டுள்ள இலங்கையில் ‘Fair Trade’ இற்கான சாத்தியங்கள் நிலவுவதாக Ma’s ஃபூட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மலிக் டி அல்விஸ் தெரிவித்தார். 'வாடிக்கையாளர்கள் எனும் ரீதியில் அவர்கள் வாங்கும் உணவிலுள்ள கூறுகள், அவை எங்கிருந்து வருகிறது, எவ்வாறு பதனிடப்படுகிறது மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஊழியர் தொடர்பான சர்வதேசளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தரங்கள் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பில்; அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும்' என மேலும் அவர் தெரிவித்தார்.
Ma’s ஆனது வாடிக்கையாளர்கள் மத்தியில் நியாயமான வர்த்தக உணவின் நேர்மறைகள் குறித்த விழிப்புணர்வையும், விவசாய சமூகத்திற்கான வாய்ப்புக்களை விருத்தி செய்வதற்காக அவர்கள் எவ்வாறு வாங்கும் சக்தியை பயன்படுத்துவது போன்றவற்றின் ஊடாக இலங்கையில் ‘Fair Trade’ வளர்ச்சிக்கு பங்களிப்பு செலுத்தி வருகிறது. இதற்கு மேலதிகமாக, Ma’s நிறுவனம் சந்தை செயல்பாட்டினை மேம்படுத்தல், உற்பத்தியாளர் நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் நியாயமான விலைகளை செலுத்தல் போன்றவற்றின் ஊடாக சாதகமான வர்த்தக ஒன்றிணைவுகளுக்கான எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago