2024 ஜூலை 27, சனிக்கிழமை

உலக கடல்புல் தினம் 2024 மற்றும் ஐ.நா. சீராக்க விருதுகள் தேசிய நிகழ்வுடன் SLT-MOBITEL கைகோர்ப்பு

Freelancer   / 2024 மே 13 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றாடல் அமைச்சினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக கடல்புல் தினம் 2024 மற்றும் ஐ.நா. சீராக்க விருதுகள் தேசிய நிகழ்வில் SLT-MOBITEL கைகோர்த்திருந்தது. இந்நிகழ்வு நீர் கொழும்பு ஜெட்விங் ப்ளு ஹோட்டலில் நடைபெற்றது. கண்டல் தாவரங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை எய்தியுள்ள சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும், இந்த நீல-காபன் சூழல் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு ஆதரவளித்திருந்ததூடாக, இலங்கையில் சூழலுக்கு நட்பான கூட்டாண்மை கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களினூடாக சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் கூட்டாண்மை முன்னோடி எனும் தனது நிலையை SLT-MOBITEL மீள உறுதி செய்திருந்தது.

2024 பெப்ரவரி 27 ஆம் திகதி கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சூழல் ஒன்றுகூடல் நிகழ்வில், ஐ.நா. சீராக்க விருதை இலங்கை பெற்றுக் கொண்டது. சுற்றாடல் அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி. அனில் ஜாசிங்க மற்றும் கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பாவனைக்கான தேசிய நிபுணர் குழுவின் தலைமை அதிகாரி பேராசிரியர். செவ்வந்தி ஜயகொடி ஆகியோர், இலங்கையின் சார்பாக இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர். உலக கடல்புல் தின நிகழ்வின் போது சுற்றாடல் அமைச்சின் செயலாளரிடம் இந்த விருதை பேராசிரியர். ஜயகொடி வைபவ ரீதியாக கையளித்திருந்தார். இலங்கையின் கண்டல் தாவர சூழல் கட்டமைப்பை மறுசீரமைப்பது தொடர்பில் இலங்கையின் புத்தாக்கமான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.

இந்த நிகழ்வின் போது, SLT-MOBITEL இன் 2024 ஆம் ஆண்டுக்கான ‘இலங்கையின் கண்டல்தாவர சூழல்கட்டமைப்புகள்” எனும் தொனிப்பொருளில் அமைந்த நாட்காட்டி வெளியிடப்பட்டிருந்தது. 12 கண்கவர் ஆக்கங்களைக் கொண்டதாக, இலங்கையின் கண்டல் தாவர சூழல் கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் இவை அமைந்திருந்தன. இந்நிகழ்வில் ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் SLT இன் சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி உரையாற்றியிருந்தார்.

முக்கியமாக, SLT-MOBITEL இணையத்தளத்தினூடாக நாட்டின் எந்தப் பாகத்தையும் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். முறையான மதிப்பாய்வு செயன்முறையினூடாக, இந்த புலமைப்பரிசிலைப் பெறுவோர் தெரிவு செய்யப்படுவர். இலங்கையின் நீல-காபன் சூழல் கட்டமைப்பின் நிலைபேறாண்மைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த புலமைப்பரிசில்கள் அமைந்துள்ளன. சூழல் நிலைபேறாண்மை தொடர்பான கல்வி மற்றும் ஆய்வுச் செயற்பாடுகளில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாட்டுடன் பொருந்தும் வகையிலும் இது அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .