2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

எடிசலாட் முன்னெடுக்கும் தெனெதகட செனெஹசக்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தெனெதகட செனெஹசக்' எனும் செயற்றிட்டம், எடிசலாட் லங்காவினால் முன்னெடுக்கப்படும் சமூகப்பொறுப்புணர்வு வாய்ந்த செயற்றிட்டமாக அமைந்துள்ளது.

So Others May see Inc. (SOMS) எனும் அரச சார்பறற நிறுவனத்துடன் இணைந்து இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பார்வையற்றத் தன்மை ஏற்படுவதுக்குப் பிரதான காரணியாகத் திகழும் விழிவெண்படலப்புரை (Cataracts)  நிலை மற்றும் பார்வைக் குறைபாடு போன்றவற்றை இலங்கையில் இல்லாமல் செய்வதுக்கு இந்த அமைப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் எடிசலாட் தனது பங்களிப்பையும் வழங்கிவருகிறது.

தேசத்தின் பார்வையைப் பாதுகாக்கும் வகையில், தனது வருடாந்த 'மூக்குக்கண்ணாடி தானம்' ('Spectacle Dansala') நிகழ்வை எடிசலாட் முன்னெடுத்திருந்தது. தேவைகள் உடையோருக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இலங்கையின் வௌவேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பார்வைப் பரிசோதனையை முன்னெடுத்திருந்ததுடன், இத்திட்டத்தினூடாக தமது கண்பார்வைத் திறன்தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்கக்கூடிய வசதிகள் குறைந்தவர்களுக்காக 8,800 மூக்குக்கண்ணாடிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது.

இச்செயற்றிட்டம் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டில், கம்பஹா மற்றும் அத்தனகல்ல கல்விப் பிரிவுகளில் செயற்படுத்தப்பட்டிருந்தது, இதன் போது 98 பாடசாலைகளைச் சேர்ந்த 78,612 மாணவர்களின் கண்கள் பரிசோதிக்கப்பட்டிருந்தன. சுமார் 900 மாணவர்களுக்கு இச்செயற்றிட்டத்தின் மூலம் மருந்துவ பரிந்துரையின் அடிப்படையிலான மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் 221 மாணவர்கள் தேசிய கண் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காகப்  பரிந்துரைக்கப்பட்டனர்.

இத்திட்டம் தொடர்பில் எடிசலாட் லங்காவின் பிரதம வணிக அதிகாரி யசீர் அபுலமயெம் கருத்து தெரிவிக்கையில், 'நாட்டின் சகல பாகங்களுக்கும் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்வது தொடர்பில் எடிசலாட் லங்கா கவனம் செலுத்தி வருகிறது. எமது சமூகத்தைச் சேர்ந்த பெருமளவானோர், இயலாமைக் காரணமாக தெளிவானப் பார்வையைக் கொண்டிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர். SOMS உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமையடைவதுடன், தவிர்க்கப்படக்கூடிய பார்வைக் குறைபாடுகள் மற்றும் பார்வையற்றதன்மையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X