2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஏ.டி.எம் வலைப்பின்னலுடன் கொமர்ஷல் கிரெடிட் இணைவு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி நிறுவனமானது வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தும் பொருட்டு புரட்சிகரமான முன்முயற்சியொன்றை மேற்கொண்டு 'லங்கா பே பொது ஏ.டி.எம். வலைப்பின்னலுடன்' (LankaPay Common ATM Network) அண்மையில் இணைந்து கொண்டுள்ளது.

அதன்மூலம், நாட்டின் மிகப் பெரிய பொதுவான  ATM வலைப்பின்னலாகத் திகழும்; LankaPay பொது ஏ.டி.எம். ஆளித்தொகுதியுடன் (CAS) இணைந்து கொள்கின்ற இலங்கையின் முதலாவது நிதிக் கம்பனி என்ற சாதனைப் பதிவை கொமர்ஷல் கிரெடிட் அன்ட ஃபினான்ஸ் பி.எல்.சி நிலைநாட்டுகின்றது. LankaPay-CAS ஆனது நாட்டில் காணப்படும் மொத்த ATMஆகளின் எண்ணிக்கையில் தற்போது 95% இக்கும் அதிகமானவற்றை உள்ளடக்கிச் செயற்படுகின்ற அதேநேரத்தில், ஒவ்வொரு மாதமும் உள்நாட்டு வங்கிகளுக்கு இடையிலான 2.5 மில்லியனுக்கும் அதிகமான ATM பரிவர்த்தனைகளை நெறிமுறைப்படுத்தி கையாள்கின்றது.

இந்தப் பங்காளித்துவமானது கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நாடெங்கும் உள்ள 3,500  LankaPay அங்கத்துவ ATM களின் ஊடாக மிகக் குறைந்த கட்டணத்தில் ATMசார்ந்தப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதுக்கு வசதி அளிக்கின்றது.

கொமர்ஷல் கிரெடிட் நிறுவன பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான ரஜீவ் காசி சிட்டி  கூறுகையில், 'இப்புரட்சிகர முன்னெடுப்பின் ஊடாக டுயமெயீயல உடன் கைகோர்ப்பதையிட்டும், அதன்மூலம் எமது ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேளையில் மிக உன்னதமான நெகிழ்வுத் தன்மையையும் மேலும் சிறந்த சௌகரியத்தையும் அவர்களுக்கு வழங்குவதையிட்டும் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். உள்நாட்டு நிதியியல் துறையானது நம்பமுடியாத விதத்தில் முன்னேறிச் செல்கின்றது. இம் முன்னேற்றத்தில் ஒரு முக்கியப் பங்குவகிப்பதே எமது தூரநோக்காகக் காணப்படுகின்றது' என்றார்.

கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தை அதன் முன்னேற்றகரமான அணுகுமுறைக்காகப் Lanka Clear தனியார் நிறுவனத்தின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு.சன்ன டீ சில்வா கூறுகையில்,  “LankaPay CAS முறைமையில் இணைந்து கொள்ளும் முதலாவது நிதிக் கம்பனியாகக் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தை வரவேற்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மிக முக்கியமான அடியினை எடுத்து வைத்ததன் ஊடாக, நாடு முழுவதிலும் உள்ள 95 வீதமான ATM மையங்களைக் கொமர்ஷல் கிரெடிட் வாடிக்கையாளர்கள் அணுகிப் பயன்பெறுவதற்கு இடமளித்துள்ளது. மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்ட நிதிக் கம்பனிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு மேலும் விஸ்தரிக்கப்பட்ட சௌகரியத்தை வழங்குவதற்கு ஆரம்பித்திருக்கின்ற நிலையில், நிதிச் சேவை துறையில் இது இன்னுமொரு முக்கிய மைல்கல்லாகவும் அமைகின்றது. நாட்டில் நிதியியல் உள்ளீர்க்கும் (inclusivity) ) பண்பை உருவாக்குதல் என்ற எமது இறுதி இலக்கை நெருங்குவதற்கு இந் நடவடிக்கை மிகவும் சாதகமானதாக அமையும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X