2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஒவ்வொரு நாளும் பால் தினம்

Gavitha   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2001 ஆம் ஆண்டு முதல் ஜுன் 01ஆம் திகதி சர்வதேச பால் தினம் உலக மக்களால் கொண்டாடப்படுகின்றது. பாலால் கிடைக்கக்கூடிய போஷாக்கு காரணமாகவே ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இந்த நாளை பிரகடனப்படுத்தியது.

1996ம் வருடத்தில், நாளாந்த போஷாக்கின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய முழுமையான பாலின் தேவையை நன்கு உணர்;ந்த லங்கா டெய்ரீஸ் தனியார் நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதற்கமைய இலங்கையில் முதன்மையானதும், சுவையூட்டப்பட்டதுமான புத்தம் புதிய பாலை டெய்லி என பெயரிட்டுச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. போஷாக்கான

டெய்லிபால் பயன்பாட்டின் ஊடாக ஒவ்வொரு நாளும் பால் தினம் என்ற செய்தி மக்களை சென்றடைந்தது. சிறியபால் பக்கற் ஊடாக இத்தகைய மிகப் பெரிய செய்தி மக்களை சென்றடைந்தமை இதன் விசேட அம்சமாகும்.

இலங்கை சந்தையில் இணைந்து கொண்ட சுவைகொண்ட பால் வகைகளில் முதன்மை உற்பத்தியாக காணப்படுகின்ற டெய்லி பால் உற்பத்திகளானது, குளிர்சாதன வசதியின்றியும் பாலின் புத்துணர்வை பேணும் வகையில் UTH ( Ultra Heat Treatment) ஊடாக பொதியிடப்பட்டு பாவனையாளர்களுக்கு கிடைத்தது. பால் பக்கற்றுகளில் பொதியிடப்படுவதை விட புத்துணர்வு தரும் வகையில் பொதியிட்டு அதனை பாவனையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் கிராமப்புறங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் குறைவாக காணப்பட்டமையும் இந்த நடவடிக்கையை எடுப்பதற்கான இன்னொரு காரணியாகும்.  

பாவனையாளர்கள் நன்கு அறியும் சொக்கலட் மற்றும் வெனிலாசுவைகளில் 1996இல் அறிமுகமான டெய்லி இன்று 200 ML  RTD பக்கற்றுகளில் ஸ்ரோபரி, வாழைப்பழம், ஐஸ் கொப்பி மற்றும் பலூடா சுவைகளிலும் கிடைக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X